Monday, 6 June 2016

கோளறுபதிகம் (7)

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

2 comments:

  1. ஆரம்ப வரிகள் முதல் அனைத்தும் அருமை.

    ருசிமிக்க ஆரம்ப வரிகளைப் படித்ததும் என் இந்தப்பதிவின் ஆரம்ப வரிகள் உடனே பளிச்சென்று என் நினைவுக்கு வந்து விட்டது. :)

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html (முதல் 10 வரிகள்)

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.. பதிவை போயி பார்க்கிறேன்...

    ReplyDelete