Tuesday, 3 May 2016

கோளறுபதிகம் (3)

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

3 comments:

  1. //பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்.//

    ஆஹா, மிகவும் அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே ......//

    நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் இவற்றை ஒருவித இராகத்துடன் வாசிக்க வாசிக்க சிறு வயதுக்கே போனதுபோன்றதோர் மகிழ்ச்சி ஏற்படுகிறது. :)

    சிறிய பதிவினில் மிகப்பெரிய மன நிறைவு. சந்தோஷமாக உள்ளது.

    தொடரட்டும்......

    ReplyDelete
  3. வாங்க ஸார்... கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete