Saturday, 22 October 2016

abiraami 46, 47, 48, 49, 50....

ந‌ல்நட‌த்தையோடு வாழ
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
யோக‌ நிலை அடைய‌
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
உட‌ல்ப‌ற்று நீங்க‌
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
ம‌ர‌ணத்துன்ப‌ம் இல்லாதிருக்க‌
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 
அம்பிகையை நேரில் காண
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.

3 comments:

  1. ஆஹா, அதற்குள் 50 ! பாராட்டுகள். வாழ்த்துகள்.

    அனைத்துமே அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    அம்பிகையை நேரில் காண .....

    சரணம் ! சரணம் !! சரணாகதி !!!

    ReplyDelete
  2. http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

    மேற்படி பதிவையும், அதிலுள்ள பின்னூட்டங்களையும்
    தாங்கள் ஒருவேளை படிக்க விரும்பலாம்.

    இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

    இப்படிக்கு கோபு

    ReplyDelete