Sunday, 17 April 2016

கோளறு பதிகம் (1`)

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

4 comments:

  1. நவக்கிரஹங்களினால் நமக்குத் தீங்கு ஏதும் ஏற்படாமல் இருக்கவேண்டி இயற்றப்பட்ட மிகவும் அருமையான பாடல்.

    சிறு வயதில் நான் இவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து சொல்லி வந்துள்ளேன். பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நன்றி ஸார்.. இப்பவும் ஸ்லோகங்கள் நினைவில் இருக்கிறதா.......

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி...24 April 2016 at 21:35
      நன்றி ஸார்.. இப்பவும் ஸ்லோகங்கள் நினைவில் இருக்கிறதா.......//

      இன்னும் நினைவினில் உள்ளது. தனியாக பாடும் அளவுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், புத்தகத்தைப்பார்த்தோ, காதால் கேட்டோ, பிறருடன் சேர்ந்தோ என்னால் அதே ராகத்துடன் பலவரிகளையும் இன்றும் பாடமுடியும்.

      நடுவில் கொஞ்சம் கொஞ்சம் மறந்து டச் விட்டுப்போய் உள்ளது.

      Delete
  3. வயசு காரணமாக மறதி ஸகஜம்தானே...

    ReplyDelete