ஆத்மாவின் பூரணத்துவத்தை உண்மையை உணர்வதே உயிர்கள் உய்வதற்குரிய வழி. அந்த வழியை காண்பித்து உதவ குருவைத்தவிர வேறு ஒருவரும் துணையில்லை. பல வழிகள் பல மதங்கள் பல தத்துவங்கள் இருந்த போதும் குருவின் பெருமை எல்லாவற்றிலும் வலியுறுத்தபட்டிருக்கிறது. வைணவ மரபில் இறைவனுக்கு ஒரு தவறு இழைத்தாலும் பெரிய தண்டனை இல்லை. குருவின் கருணையிருந்தால் போதும் என்ற நம்பிக்கை உண்டு.
அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் சீடன் என்று மூன்று பேர் இருந்த போதும் இவர்கள் மூன்று பேருமே ஒருவர்தான் – உணர்தலில் தான் வேறுபாடு உள்ளது என்ற பொருள் படும்படி ஆதி சங்கரரின் ஸ்லோகங்கள் உண்டு.
ஆதிசங்கரரின் சீடர்களில் தோடகர் என்றொரு மகான். அவர் இயற்றிய
தோடகாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்கள் ஜகத்குருவான ஆதிசங்கரரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகங்கள் மிகவும் கடினமான சங்கத இலக்கண அடிப்படையில் இருந்தாலும் ஓதுவதற்கு மிகவும் அழகானவையாக நயமானதாக இருக்கின்றன.
தோடகாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்கள் ஜகத்குருவான ஆதிசங்கரரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகங்கள் மிகவும் கடினமான சங்கத இலக்கண அடிப்படையில் இருந்தாலும் ஓதுவதற்கு மிகவும் அழகானவையாக நயமானதாக இருக்கின்றன.
இந்த தோடகாஷ்டகத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது ஆதிசங்கரரின் பெருமையும் தெய்வீகமும் வெளிப்படுவதோடல்லாமல் அவரிடம் தோடகருக்கிருந்த குருபக்தியும் வெளிப்படையாகிறது.
( கோபால்ஸார், நீங்க ஆதி சங்கரரின் தொடர் பதிவில் இந்த ஸ்லோகத்தின் பெருமைகள் பற்றி சொல்லி இருந்தீங்க.... அதான் இங்க போட்லாம்னு நினைத்தேன்...)
அடுத்தவாரம் ஸ்லோகம் தொடரும்.. இப்ப ஒரு சின்ன விளக்கம் மட்டுமே..
ஆஹா, அருமையான எளிமையான விளக்கங்கள். தொடரட்டும். அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDelete//( கோபால் ஸார், நீங்க ஆதி சங்கரரின் தொடர் பதிவில் இந்த ஸ்லோகத்தின் பெருமைகள் பற்றி சொல்லி இருந்தீங்க.... அதான் இங்க போட்லாம்னு நினைத்தேன்...)//
ஆம். இதோ என் இந்தப்பதிவினில் அது உள்ளது:
http://gopu1949.blogspot.in/2012/04/18.html
http://gopu1949.blogspot.in/2012/04/15.html இதோ இந்தப்பதிவினிலும் ’கிரி’ என்று முன்னால் எல்லோராலும் அழைக்கப்பட்ட ’தோடகர்’ பற்றியும், அவரால் முதன்முதலாக சொல்லப்பட்ட குரு வந்தன ஸ்லோகங்களான தோடகாஷ்டகம் பற்றியும் சில செய்திகள் உள்ளன.
ReplyDeleteவருகைக்கும் தகவல்களுக்கும் நன்றிகள் ஸார்.....
ReplyDelete