Friday, 4 March 2016

ஹனுமான் சாலிசா (3)

லாய ஸஜீவன லகன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11) இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய் அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார் ரகுபதி கீன்ஹி


பகுத படாயீ தும மம ப்ரிய பரத சம பாயீ (12) உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான் எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான் ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட


லகாவைம் (13) உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே! ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா நாரத ஸாரத ஸஹித


அஹிஸா (14) யம குபேர திக்பால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15) ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள் நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட! தும உப்கார ஸுக்ரீவஹிம்


கீன்ஹா ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16) குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே! தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17) உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன் வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே! ஜுக


ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18) பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே! ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி


கயே அசரஜ நாஹீம் (19) அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே! துர்கம காஜ ஜகத கே தேதே ஸுகம அனுக்ரஹ


தும்ஹரே தேதே (20) இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும் வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே ராம துஆரே தும


ரக்வாரே ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21) இராமனது வாயில் காவலன் நீ உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே! சப ஸுக


லஹை தும்ஹாரி ஸரனா தும ரக்‌ஷக காஹு கோ டர்னா ………………… (22) எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்? ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை தீனோம லோக


ஹாங்க தே காம்பை ……. (23) உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின் முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே! பூத பிஷாச நிகட நஹீம் ஆவே மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24) அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும் பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!

3 comments:

  1. // இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய் அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார் ரகுபதி //

    ஆஹா, யாருக்குக்கிடைக்கும் இந்த ஒரு பாக்யம் !

    ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் அர்த்தத்துடன் சொல்லியுள்ளது சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.

    ReplyDelete
  3. http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html -
    ஓர் துக்கமான செய்தி .... தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete