Saturday, 27 February 2016

ஹனுமான் சாலிசா (2)

கஞ்சன பரன விராஜ ஸுவேஸா கானன குண்டல குஞ்சித கேஸா (4) 

பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ! மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன் ஹாத பஜ்ர ஒளர

த்வஜா பிராஜை காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5) வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன் முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன் ஷங்கர

ஸுவன கேஸரி நந்தன தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6) சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே

வணங்கும் வித்யாவான குணி அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர (7) கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ! சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய் ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லகன ஸீதா

மன பசியா (8) இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே! இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே! சூக்‌ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா விகட ரூப தரி லங்க ஜராவா (9) சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய் பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு

இரையாக்கினாய். பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10) பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய் ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்

4 comments:

  1. ஹனுமனின் பராக்ரமங்கள் பற்றிச் சொல்லும் மிக அழகான பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. Replies
    1. ஸ்ரீ அனுமனின் பராக்கிரமங்களைச்சொல்லும் அனுமான்சாலிசா சிறந்த பதிவு. நன்றி.

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete