Saturday, 20 February 2016

ஹனுமான் சாலீசா (1`)

ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி எனது மனது எனும் கண்ணாடியாம் அதை குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து ’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம் இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன். புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார் குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன். சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்! முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று. ஜய ஹனுமான ஞான குன ஸாகர ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1) வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம் வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன் ராம தூத அதுலித பல தாமா அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2) அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன் அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன் மஹா வீர விக்ரம பஜரங்கி குமதி நிவார ஸுமதிகே சங்கி (3) மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ! தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!

2 comments:

  1. //குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன். சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்! முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று.//

    அதே .... அதே !

    மிக அருமையான வேண்டுதல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நீங்க வந்து படித்து கருத்து சொன்னதும்தான் திருப்தியாக இருக்கு. நன்றி ஸார்.

    ReplyDelete