Saturday 27 February 2016

ஹனுமான் சாலிசா (2)

கஞ்சன பரன விராஜ ஸுவேஸா கானன குண்டல குஞ்சித கேஸா (4) 

பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ! மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன் ஹாத பஜ்ர ஒளர

த்வஜா பிராஜை காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5) வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன் முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன் ஷங்கர

ஸுவன கேஸரி நந்தன தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6) சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே

வணங்கும் வித்யாவான குணி அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர (7) கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ! சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய் ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லகன ஸீதா

மன பசியா (8) இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே! இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே! சூக்‌ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா விகட ரூப தரி லங்க ஜராவா (9) சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய் பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு

இரையாக்கினாய். பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10) பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய் ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்

Saturday 20 February 2016

ஹனுமான் சாலீசா (1`)

ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி எனது மனது எனும் கண்ணாடியாம் அதை குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து ’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம் இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன். புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார் குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன். சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்! முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று. ஜய ஹனுமான ஞான குன ஸாகர ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1) வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம் வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன் ராம தூத அதுலித பல தாமா அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2) அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன் அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன் மஹா வீர விக்ரம பஜரங்கி குமதி நிவார ஸுமதிகே சங்கி (3) மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ! தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!

Saturday 13 February 2016

அனுமன் சாலிஸாவின் மகிமை.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் " நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே....எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்".என்றார்.


நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே...என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.  எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம். என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர்மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழிபட்டார்.  


இப்படி நாற்பது பாடல்கள் எழுதியதும்,திடீரென  எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்  அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன. 


படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
 அக்பரிடம் சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப் படுத்துவதால் ஆஞ்சநேயருக்கு கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்சினை நீங்கிவிடும். என்று ஆலோசனை அளித்தனர். 


அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து  வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே  வானரப்படைகள் மாயமாய் மறைந்தன.


 துளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமான்சாலிஸா.  இதை தினமும் பாராயணம் செய்தால் துன்பங்கள் நீங்கும்.. நன்மைகள் தேடிவரும்....

அடுத்த பதிவாக  அனு
மான் சாலிஸா வை போடறதாக இருக்கேன்.

Sunday 7 February 2016

ஸௌந்தர்யலஹரி (2`1)(நிறைவு பகுதி)

96. "தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை" 
[ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] 

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய: 
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I 
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே 
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: II 
97. "பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்" 
[ஜீவன் முக்தி] 

"கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ 
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் I 
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா 
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி II 
98. "பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும்" 
[வாக் ஸித்தி] 

கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம் 
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் I 
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா 
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் II 
99. "தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள்
இவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்" [பேரின்பம்] 
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே 
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா I 
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர: 
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் II 
100. "தேவியளைத்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு
அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம்" 
[ஸகல ஸித்தி] 

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி; 
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா I 
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம் 
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் II
 


Monday 1 February 2016

ஸௌந்தர்யலஹரி (20)

91. " தேவியின் நடையழகு" [பூமி லாபம்; தன லாபம்] 
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ: 
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ந ஜஹதி I 
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித 
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே II 
92. "தேவியின் இருக்கை" [ஆளும் திறமை] 
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத: 
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I 
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா 
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் II 
93. "சிவனுடைய கருணையின் உருவே தேவி' 
[மனோரத சித்தி] 

அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே 
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே I 
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே 
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா II 
94. "தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம்
போன்றது சந்திர பிம்பம்" [இஷ்ட ப்ராப்தி] 
கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம் 
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் I 
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம் 
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே II 
95. "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி
வழிபட இயலாது" [இஷ்ட ப்ராப்தி] 
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ: 
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா I 
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம் 
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: II