Friday 25 March 2016

ஹனுமான் சாலிசா (6 நிறைவு)

ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39) எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி. துலஸிதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய


மஹம் டேரா. (40) துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம் அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே! பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே! எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

Friday 18 March 2016

ஹனுமான் சாலிசா (5)

ராம ரஸாயன தும்ஹரே பாஸா ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32) இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு தும்ஹரே பஜன ராம கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக


பிஸ்ராவை .. (33) உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே! அந்த கால ரகுபர புர ஜாயி ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34) அந்திம காலத்தில் இராமனின்


இருப்பிடம் அடைவோர் அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர் ஒளர தேவதா சித ந தரயி ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35) அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே! ஸங்கட


கடை மிடை சப பீரா ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36) எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின் எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே. ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி க்ருபா கரஹ குருதேவ கீ

நாயி … (37) ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே! ஜோ ஷத பார பாட கர கோயி சுட்ஹி பந்தி மஹாஸுக

ஹோயி (38) எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!

Friday 11 March 2016

ஹனுமான் சாலிசா (4)

நாஸை ரோக ஹரை ஸப பீரா ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25) எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால் ஸங்கட


தே ஹனுமான சுடாவை மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26) எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் ஸப பர ராம தபஸ்வி ராஜா தின்கே காஜ


சகல தும ஸாஜா ……….. (27) இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின் பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ! ஒளர மனோரத ஜோ கோயி லாவை ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28) உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம் உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே! சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா ஹை பரசித்த ஜகத


உஜியாரா …. (29) யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே சாது சந்த கே தும ரக்வாரே அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30) சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும் அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய


நீயே! அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா அஸ வர தீன ஜானகி மாதா.. (31) சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும் சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி

Friday 4 March 2016

ஹனுமான் சாலிசா (3)

லாய ஸஜீவன லகன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11) இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய் அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார் ரகுபதி கீன்ஹி


பகுத படாயீ தும மம ப்ரிய பரத சம பாயீ (12) உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான் எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான் ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட


லகாவைம் (13) உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே! ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா நாரத ஸாரத ஸஹித


அஹிஸா (14) யம குபேர திக்பால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15) ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள் நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட! தும உப்கார ஸுக்ரீவஹிம்


கீன்ஹா ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16) குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே! தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17) உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன் வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே! ஜுக


ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18) பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே! ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி


கயே அசரஜ நாஹீம் (19) அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே! துர்கம காஜ ஜகத கே தேதே ஸுகம அனுக்ரஹ


தும்ஹரே தேதே (20) இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும் வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே ராம துஆரே தும


ரக்வாரே ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21) இராமனது வாயில் காவலன் நீ உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே! சப ஸுக


லஹை தும்ஹாரி ஸரனா தும ரக்‌ஷக காஹு கோ டர்னா ………………… (22) எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்? ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை தீனோம லோக


ஹாங்க தே காம்பை ……. (23) உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின் முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே! பூத பிஷாச நிகட நஹீம் ஆவே மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24) அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும் பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!