Sunday 24 April 2016

கோளறு பதிகம் (2)

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

Sunday 17 April 2016

கோளறு பதிகம் (1`)

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

Saturday 9 April 2016

தோடகாஷ்ட்டகம்

தோடகாஷ்டகம் விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோப நிஷத் கதிதார்த நிதே | ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||

 ண கருணா வருணாலய பாலய மாம் பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் | ரசயாகில தர்சன தத்வ விதம் பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||

 பவதா ஜனதா ஸுஹிதா பவிதா நிஜபோத விசாரண சாருமதே | கலயேஸ்வர ஜீவ விவேக விதம் பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||

 பவ எவ பவானிதி மெனிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா | மம வாரய மோஹ மஹா ஜலதிம் பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||

 சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ பவிதா ஸமதர்சன லாலஸதா | அதி தீனமிமம் பரிபாலய மாம் பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||

 ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: | அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ பவ சங்கர தேசிக மே சரணம் || 6 || 

குருபுங்கவ புங்கவகேதன தே ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: | சரணாகத வத்ஸல தத்வ நிதே பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||

 விதிதா நமயா விதைக கலா ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ | து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம் பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||

Friday 1 April 2016

தோடகாஷ்ட்டகம் (சிறு விளக்கம்)

ஆத்மாவின் பூரணத்துவத்தை உண்மையை உணர்வதே உயிர்கள் உய்வதற்குரிய வழி. அந்த வழியை காண்பித்து உதவ குருவைத்தவிர வேறு ஒருவரும் துணையில்லை. பல வழிகள் பல மதங்கள் பல தத்துவங்கள் இருந்த போதும் குருவின் பெருமை எல்லாவற்றிலும் வலியுறுத்தபட்டிருக்கிறது. வைணவ மரபில் இறைவனுக்கு ஒரு தவறு இழைத்தாலும் பெரிய தண்டனை இல்லை. குருவின் கருணையிருந்தால் போதும் என்ற நம்பிக்கை உண்டு.
அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் சீடன் என்று மூன்று பேர் இருந்த போதும் இவர்கள் மூன்று பேருமே ஒருவர்தான் – உணர்தலில் தான் வேறுபாடு உள்ளது என்ற பொருள் படும்படி ஆதி சங்கரரின் ஸ்லோகங்கள் உண்டு.
ஆதிசங்கரரின் சீடர்களில் தோடகர் என்றொரு மகான். அவர் இயற்றிய
தோடகாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்கள் ஜகத்குருவான ஆதிசங்கரரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகங்கள் மிகவும் கடினமான சங்கத இலக்கண அடிப்படையில் இருந்தாலும் ஓதுவதற்கு மிகவும் அழகானவையாக நயமானதாக இருக்கின்றன.
இந்த தோடகாஷ்டகத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது ஆதிசங்கரரின் பெருமையும் தெய்வீகமும் வெளிப்படுவதோடல்லாமல் அவரிடம் தோடகருக்கிருந்த குருபக்தியும் வெளிப்படையாகிறது.

(  கோபால்ஸார், நீங்க ஆதி சங்கரரின் தொடர் பதிவில் இந்த ஸ்லோகத்தின் பெருமைகள் பற்றி சொல்லி இருந்தீங்க.... அதான் இங்க போட்லாம்னு நினைத்தேன்...)
அடுத்தவாரம் ஸ்லோகம் தொடரும்.. இப்ப ஒரு சின்ன விளக்கம் மட்டுமே..