Sunday 24 April 2016

கோளறு பதிகம் (2)

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

2 comments:

  1. அருமையான பாடல் .... அழகாக விளக்கம்.

    என் பழைய பதிவுகளில் தங்களுக்கு இரண்டு பதில்கள் தர வேண்டியுள்ளது ... எனக்கும் அவை நினைவில் உள்ளன.

    இந்த வாரம் முழுவதும் நான் கொஞ்சம் என் சொந்த வேலைகளில் பிஸி. 27.04.2016 அப்பா ஸ்ராத்தம் வருகிறது + எங்கள் குடும்பத்தால் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்றுவரும் எங்களின் குடும்பக்கோயில் ஒன்றுக்கு கும்பாபிஷேகம் வரும் 29.04.2016 நடைபெற உள்ளது.

    அதனால் மே மாதம் முதல் நாம் மீண்டும் தொடர்வோம்.

    ReplyDelete
  2. ஓ..கே.... நோ.ப்ராப்லம்...ஸார்..

    ReplyDelete