Sunday 7 August 2016

abiraani 26, 27, 28, 29, 30....

சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக‌
26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
ம‌ன‌நோய் அக‌ல‌
27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
இம்மை ம‌றுமை இன்ப‌ங்க‌ள் அடைய‌
28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
எல்லா சித்திக‌ளும் அடைய‌
29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அடுத்த‌டுத்து வ‌ரும் துன்ப‌ங்க‌ள் நீங்க‌
30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே

3 comments:

  1. ஆஹா, அனைத்து ஸ்லோகங்களும், அதன் பயன்களும் இனிமையோ இனிமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

    ReplyDelete