Sunday 22 January 2017

abiraami 71`, 72, 73, 74, 75.....

ம‌ன‌க்குறைக‌ள் தீர‌
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
பிற‌விப்பிணி தீர‌
72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
குழந்தைப்பேறு உண்டாக‌
73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
தொழிலில் மேன்மை அடைய
74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
விதியை வெல்ல
75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

4 comments:

  1. விதியை வென்றேன் ... அதனால் இந்தப் பதிவைப் படிக்கும் தொழிலில் மேன்மை அடைந்தேன். குழந்தைப்பேறு இல்லாத அனைவருக்கும் அது கிடைக்கடும் என வேண்டிக்கொண்டேன். இப்போதுதான் என் மனக்குறைகள் தீர்ந்து போனதாக உணர முடிகிறது. பிறவிப்பிணி தீர வேண்டியதே இன்னும் பாக்கியுள்ளது.

    சூப்பரான அபிராமி அந்தாதி 71-75 க்கான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. Dear Sir,

    You may like to visit the following Links:

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/01/1-of-3.html
    தலைப்பு: நினைவாற்றல் - பகுதி 1 of 3

    இணைப்பு: https://gopu1949.blogspot.in/2017/01/2-of-3.html
    தலைப்பு: நினைவாற்றல் - பகுதி 2 of 3

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/01/3-of-3.html
    தலைப்பு: நினைவாற்றல் - பகுதி 3 of 3

    ’அஷ்டாவதானி’ ஒருவரின் அபாரமான சாதனைகள்.

    ReplyDelete
  3. You may like to go through the following Link:

    http://gopu1949.blogspot.in/2017/02/blog-post.html

    ReplyDelete