Wednesday 8 March 2017

abiraami 75, 76, 77, 78, 79, 80....

க‌ணவ‌ன் ம‌னைவி ஒற்றுமைக்கு
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
ப‌கை நீங்க
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
ஆண்க‌ளின் நீண்ட‌ ஆயுளுக்கு
78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
சிற்றின‌ம் சேராதிருக்க‌
79: விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
எல்லையில்லா ஆன்ந்த‌ம் அடைய‌
80: கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.

2 comments:

  1. ஆஹா, அபிராமி அந்தாதி 76 to 80 சூப்பர் !

    எல்லாவற்றையும் படித்த நான், கடைசியில் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    You may like to go through the following Links:

    http://unjal.blogspot.com/2017/02/1.html

    http://unjal.blogspot.com/2017/02/2.html

    ReplyDelete