Wednesday 15 March 2017

abiraami 86, 87, 88, 89, 90....

ப‌ய‌ப்ப‌டாம‌ல் இருக்க‌
86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
செய்ய‌ முடியாத‌வ‌ற்றைச் செய்து புக‌ழ்பெற
87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
அபிராமியைச் சர‌ண‌டைய‌
88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
அன்னையை ம‌றக்காம‌ல் இருக்க‌
89: சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
குறைக‌ள் நீங்கிப் பிரிந்த‌வ‌ர் கூட‌
90: வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

5 comments:

  1. ஆஹா, அடுத்த ஐந்து .... அனைத்தும் அற்புதமாக உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. என் வலைத்தளத்தில் இரண்டு புதுப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    https://gopu1949.blogspot.in/2017/03/15032017.html

    https://gopu1949.blogspot.in/2017/03/81.html

    இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  3. தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகு, நீண்ட நாட்களுக்குப்பின், இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள். ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் சும்மாப் படங்கள் மட்டுமே. நேரமும் ஆர்வமும் இருந்தால் அங்கு போய் ஏதேனும் கமெண்ட்ஸ் கொடுங்கோ. அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    அவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:

    1) http://httpvasantham.blogspot.in/2017/05/blog-post_7.html

    2) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_5.html

    3) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_7.html

    4) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji.html

    ReplyDelete