Thursday 18 May 2017

abiraami 91`, 92, 93, 94, 95.....

உய‌ர்ந்த‌ பத‌வி கிடைக்க‌
91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
கொள்கைப் பிடிப்புக்கு
92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
உண்மை நிலையை அறிய‌
93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
ம‌ன‌நோய் அக‌ல‌
94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
ந‌ன்மையும் தீமையும் ஒன்றென‌க் கருத‌
95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

3 comments:

  1. ஆஹா, நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் அடுத்த ஐந்து அபிராமி அந்தாதிகள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  2. சமீபத்திய என் பதிவுகள் எதிலும் தங்களைக் காணவே காணும். மிகவும் வருத்தமாக உள்ளது.

    முடிந்தால் ஒவ்வொன்றாக டாப் டு பாட்டமாக வாங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete