Sunday 20 December 2015

சௌந்தர்யலஹரி (`1)

 
"சௌந்தர்ய லஹரி"
 
 
"சௌந்தர்ய லஹரி" ஆதி சங்கரர்
 
(சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை
அமையப்பட்டுள்ளன.
சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன. பஞ்ச லிங்கங்கள் அரூ்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். சங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான். இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன. பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார். இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் சங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்)

நாளை முதல் ஒரு நாள்விட்டு ஒரு நாள் பத்து,  பத்து ஸ்லோகங்கள் பதிவிட ஆசை. 

4 comments:

  1. மிகவும் நல்லதொரு முயற்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸார் நானே உங்க பக்கம் வந்து தகவல் சொல்ல நினைத்தேன். நீங்களே வ்ந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி ஸார். ஒரு நாள்விட்டு ஒரு நாள் பதிவு போடறேன். கண்டிப்பா வந்து கருத்து சொல்லுங்க. நன்றி

      Delete
  2. சௌந்தர்ய லஹரி பற்றிய
    சௌந்தர்யமான தொடக்கம்..!
    தொடர்கிறேன்.. நன்றிகள்..! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
    Replies
    1. அம்மா வாங்கம்மா. நீங்க வந்து கருத்து சொல்வது எவ்வளவு
      சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஒபு நாள்விட்டு ஒரு நாள் பதிவு போட நினைத்திருக்கேன். தவறாம வந்து கருத்து சொல்லுங்கம்மா. நன்றி

      Delete