Friday 11 March 2016

ஹனுமான் சாலிசா (4)

நாஸை ரோக ஹரை ஸப பீரா ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25) எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால் ஸங்கட


தே ஹனுமான சுடாவை மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26) எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் ஸப பர ராம தபஸ்வி ராஜா தின்கே காஜ


சகல தும ஸாஜா ……….. (27) இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின் பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ! ஒளர மனோரத ஜோ கோயி லாவை ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28) உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம் உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே! சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா ஹை பரசித்த ஜகத


உஜியாரா …. (29) யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே சாது சந்த கே தும ரக்வாரே அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30) சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும் அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய


நீயே! அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா அஸ வர தீன ஜானகி மாதா.. (31) சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும் சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி

2 comments:

  1. அர்த்தங்களுடன் கூடிய மிக அழகான தொடர் பதிவு.

    ஜெய் ஹனுமான் !

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.

    ReplyDelete