Friday 18 March 2016

ஹனுமான் சாலிசா (5)

ராம ரஸாயன தும்ஹரே பாஸா ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32) இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு தும்ஹரே பஜன ராம கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக


பிஸ்ராவை .. (33) உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே! அந்த கால ரகுபர புர ஜாயி ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34) அந்திம காலத்தில் இராமனின்


இருப்பிடம் அடைவோர் அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர் ஒளர தேவதா சித ந தரயி ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35) அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே! ஸங்கட


கடை மிடை சப பீரா ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36) எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின் எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே. ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி க்ருபா கரஹ குருதேவ கீ

நாயி … (37) ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே! ஜோ ஷத பார பாட கர கோயி சுட்ஹி பந்தி மஹாஸுக

ஹோயி (38) எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!

2 comments:

  1. //இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு//

    //உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே!//

    //அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே!//

    //எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின் எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே.//

    ஆஹா, அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ஜெய் ஹனுமான் !

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.

    ReplyDelete