Wednesday 20 July 2016

abiraami 1`6, 1`7.,`18, 1`9, 20.....

முக்கால‌மும் உண‌ரும் திற‌ன் உண்டாக‌
16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
க‌ன்னிகைக‌ளுக்கு ந‌ல்ல‌ வ‌ர‌ன் அமைய‌
17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
ம‌ர‌ண‌ப‌ய‌ம் நீங்க‌
18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
பேரின்ப‌ நிலைய‌டைய‌
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
வீடுவாச‌ல் முத‌லிய‌ செல்வ‌ங்க‌ள் உண்டாக‌
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.

4 comments:

  1. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. You may like to visit:

    http://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html

    ReplyDelete
  3. பிரமாதம் ... பிரமாதம் ...

    16 to 20 அனைத்துமே பிரமாதம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete