Monday, 25 January 2016

குடியரசு தினம்.

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும். முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது. மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும், துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு. குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26. சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையான குடிமக்கள்! குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம். இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்வோம். ­ ஜெய்ஹிந்த்! ***

10 comments:

 1. குடியரசு தினம் பற்றிய விளக்கங்கள் அருமை. தங்களின் ஆதங்கங்கள் நியாயமானவைகளாகும். இனியாவது நம் கடமைகளைச் சரிவரச் செய்வோம். ­ ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்

  ReplyDelete
 3. தங்களின் வேண்டுகோளின்படி, தங்களின் வலைப்பதிவுக்கு நான் முதல் பின்தொடர்பவராக (FOLLOWER ஆக) ஆகியுள்ளேன். மகிழ்ச்சிதானே ! :)

  வாழ்த்துகள். வாழ்க ! வளர்க !!

  ReplyDelete
 4. ரொம்ப சந்தோஷம் ஸார். முதல் ஃபாலோவரும் நீங்கதான். கடைசி ஃபாலோவரும் நீங்கதான். :)))) நான் தான் உங்க பக்கமும் திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா பதிவுகள் பக்கமும் மட்டுமே வரேன். வேறு பதிவுகள் பக்கம் போக டயமில்ல.ஸோ...... என் பக்கமும் யாரும் வர வாய்ப்பே இல்ல.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... 27 January 2016 at 20:25

   //ரொம்ப சந்தோஷம் ஸார். முதல் ஃபாலோவரும் நீங்கதான். கடைசி ஃபாலோவரும் நீங்கதான். :))))//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, நல்லா நகைச்சுவையாகச் சொல்கிறீர்கள். பதிவுலகத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்தும் கொண்டுள்ளீர்கள். GOOD ! :)

   //நான் தான் உங்க பக்கமும் திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா பதிவுகள் பக்கமும் மட்டுமே வரேன்.//

   மிகவும் சந்தோஷம். புளியங்கொம்பாக இருவரைப் பிடித்துள்ளீர்களாக்கும் :)

   //வேறு பதிவுகள் பக்கம் போக டயமில்ல.//

   அதெல்லாம் டயமே இருக்காதுதான். பரவாயில்லை.

   //ஸோ...... என் பக்கமும் யாரும் வர வாய்ப்பே இல்ல.//

   ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகி விடும். Don't worry ! :)

   Delete
 5. நான் பின்னூட்டம் போட்ட 5--வது நிமிஷமே உங்க ரிப்லை வந்ததே. எப்படி????? புளியங்கொம்புல ஒரு கொம்புதானே என்பக்கம் வறாங்க. அவங்கலுக்கு போயி போயி நினைவு படுத்த சங்கடமாக இருக்கு. போயி கூப்பிட்டா உடனே வருவாங்கதான், எனக்குதான் எப்படியோ இருக்கு. டிஸ்டர்ப் பண்ணுறதா நினைச்சுடக்கூடாதில்லையா?????

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... 27 January 2016 at 21:10

   //நான் பின்னூட்டம் போட்ட 5--வது நிமிஷமே உங்க ரிப்லை வந்ததே. எப்படி?????//

   நான் கமெண்ட் போட்டதும், தங்களுக்கு அதை அனுப்புவதற்கு முன்பு, கமெண்ட் பாக்ஸுக்கு அடியில் வலதுபுறமாக உள்ள Notify me என்பதை Tick அடித்தபின் மட்டுமே அனுப்புவேன்.

   இதனால் உங்கள் பதிவினில் நீங்கள் எனக்குக் கொடுக்கும் பதில்களும், மற்றவர்கள் தங்களுக்குக் கொடுக்கும் பின்னூட்டங்களும், என் கவனத்திற்கு உடனுக்குடன் மெயில் இன்-பாக்ஸ் மூலம் கிடைத்துவிடும்.

   அதனாலும், தாங்கள் எனக்கு பதில் கொடுத்தபோது நான் தூங்காமல் விழித்திருந்து என் மெயில் இன்-பாக்ஸ் தகவலைப் பார்த்திருக்கக்கூடும் என்பதாலும் ஒருவேளை 5 நிமிடங்களுக்குள் நான் ரிப்ளை கொடுத்திருப்பேன்.

   நேற்று 27th இரவு விடிய விடிய நான் கணினியில் தான் இருந்தேன். எனக்குப் பொட்டுத்தூக்கம் இல்லை. இரவு முழுவதும் சிவராத்திரிபோல விழித்திருந்தேன். இன்று காலை 8 மணிக்குத்தான் தூங்க ஆரம்பித்து, இப்போது பிற்பகல் 3 மணிக்குத்தான் விழித்து எழுந்துள்ளேன். இது போலெல்லாம் நான் எப்போ தூங்குவேன், எப்போ எழுந்து விழித்திருப்பேன் என்பது எனக்கே தெரியாமல் உள்ளது. அதுபோல என் தேகத்தில் பலவித அசெளகர்யங்கள் உள்ளன. பகலோ இரவோ எப்படியோ ஒருநாளைக்கு 7-8 மணி நேரங்களாவது உறங்குவதில் எனக்கு ஓர் நிம்மதியாக உள்ளது.

   //புளியங்கொம்புல ஒரு கொம்புதானே என்பக்கம் வறாங்க. அவங்களுக்கு போயி போயி நினைவு படுத்த சங்கடமாக இருக்கு. போயி கூப்பிட்டா உடனே வருவாங்கதான், எனக்குதான் எப்படியோ இருக்கு. டிஸ்டர்ப் பண்ணுறதா நினைச்சுடக்கூடாதில்லையா?????//

   அவர்களுக்கும் கொஞ்சம் நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாக என்னால் உணர முடிகிறது. மேலும் அவர்கள் இல்லத்தில் சமீபத்தில் ஓர் சுப காரியம் நிகழ்ந்துள்ளது. அதனாலும் ஒருவேளை மிகவும் பிஸியாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மற்றபடி நீங்க திரும்பத்திரும்ப அங்கு போய் அவர்களை அழைக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதி புத்திசாலியும்கூட. யார் யார் என்னென்ன பதிவுகள் போடுகிறார்கள், அதற்கு யார் யார் என்னென்ன பின்னூட்டம் அளிக்கிறார்கள் என்ற அனைத்துப் புள்ளிவிபரங்களும் அவர்களின் விரல் நுனியிலேயே வைத்திருப்பார்கள்.

   Delete
  2. அவங்க மகனுக்கு நடந்த திருமண வைபவம் பற்றி பதிவு போட்டிருந்தாங்க. அங்க போயி வாழ்த்து சொல்லி அவங்களை என் பதிவு பக்கம் வாங்கனு அழைப்பு விடுத்திருக்கேன்.

   Delete
 6. http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html

  மேற்படி பதிவுக்குச் சென்று பார்க்கவும். விருப்பப்பட்டால் தங்களின் பின்னூட்டங்களையும் அங்கு பதிவு செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா போயி பார்த்து பின்னூட்டமும் போடுறேன். உங்க பதிவுகள் எல்லாம் எவ்வளவு விரும்பி படித்து வருகிறேன் என்று உங்களுக்கே தெரியுமே.????

   Delete